அசைவ உணவுகளுக்குத் தடை.. அதுவும் இந்திய நகரத்தில்.!
non veg ban in gujarat
உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஊரில் அசைவ உணவுகளுக்கு தடை விதித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இஞ்சுக்கு காண்போம்.
குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் சமணக் கொள்கைகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் அகிம்சையை தங்கள் நம்பிக்கையின் மையக் கோட்பாடாகக் கருதும் ஜெயின் சமூகத்தினர், மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பாலிதானாவில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடக்கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலிதானாவை முன்மாதிரியாக பின்பற்றி குஜராத்தில் உள்ள மற்ற நகரங்களான ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், அகமதாபாத்தில் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்த தொடங்கியுள்ளன. இந்த முடிவு, அசைவ பிரியர்களுக்கு இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.