ஒடிசா மாநில அமைச்சர் நபா தாஸ் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!
odisha minister modi NapaKishoreDas
ஒடிசா மாநில சுகாதார மற்றும் குடும்பநலதுறை அமைச்சராக இருந்த நபா தாஸ், பிரஜாராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சர் மீது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், அவரது நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் வழிந்தோடியது. உடனே அங்கிருந்தவர்கள் அமைச்சரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை அமைச்சர் நபா தாஸ் உரிழந்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் நபா தாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரின் அந்த இரங்கல் செய்தியில், "ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
odisha minister modi NapaKishoreDas