ஆடி கார் மீது லேசாக மோதிய ஓலா டிரைவர்! அடித்து தரையில் தூக்கி வீசிய உரிமையாளர்!
Ola driver who slightly hit the Audi car The owner threw it on the ground
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை அடித்து தூக்கி தரையில் விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கார் உரிமையாளர் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் கொண்ட அந்த 30 வினாடிகள் வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த ஆடி கார் உரிமையாளர், காரை விட்டு இறங்கி வந்து ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி தரையில் வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த ஓட்டுனரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி உரிமையாளர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.
English Summary
Ola driver who slightly hit the Audi car The owner threw it on the ground