சோகத்தில் திரையுலகம் - கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் காலமானார்.! - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் உயிரிழந்தார். அதன் படி அவரது உடல் இன்று காலை கொச்சி அருகே பனம்பிள்ளியில் உள்ள அவரது அடுக்கு மாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் நிஷாத் யூசுப் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திடீரென்று ஏற்பட்ட நிஷாத் யூசுப்பின் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

நிஷாத் கடந்த 2022-ம் ஆண்டு 'தள்ளுமாலா' படத்துக்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதினை வென்றவர். குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanguva moie editor nishath yusuf passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->