விஜய் மாநாடு: போடு வெடிய... ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் இன்று தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

புத்தாடை அணிந்து, இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்துப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். 

அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்த் உற்சாகமாக தெரிவித்தார். 

பிறகு, அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். அனைவரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேண்டும்," என்றார். 

மேலும், செய்தியாளர்கள் நடிகர் விஜயின் மாநாடு பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "மாநாடு உண்மையில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்," எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth say about Vijay TVk maanadu and Diwali wish


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->