குப்பைத் தொட்டியில் வீசபட்ட லாட்டரி சீட் - ஆட்டோ ஓட்டுனருக்கு அடித்த ஜாக்பாட்.!
one crore lottary seet won auto driver in kerala
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் மூலவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அரசின் 50:50 என்ற குலுக்கல் பரிசு திட்டத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார்.
ஆனால், ஆட்டோ ஓட்டுநர் சுனில்குமார், ‘தனக்கு அதிர்ஷ்டம் இல்லை... வழக்கம் போல இந்த லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசு தொகை கிடைக்காது" என்று கருதி, லாட்டரி சீட்டை வீட்டில் இருந்த குப்பை தொட்டியில் வீசிவிட்டு, தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையே, அந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் கடந்த 18-ம் தேதி நடத்தப்பட்டு மறுநாள் பரிசு பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டது. உடனே சுனில் குமார் வீட்டிற்குச் சென்று குப்பைத் தொட்டியில் தூக்கிய வீசிய லாட்டரி சீட்டை எடுத்து பார்த்துள்ளார்.
அந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்ட அவர், பரிசுத்தொகையை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இது தொடர்பாக சுனில் குமார் பேசுகையில், "ரூ.1 கோடியை வைத்து, அடமானத்தில் உள்ள வீட்டை மீட்டு, புதிய வீடு கட்ட உள்ளதாகவும், வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
one crore lottary seet won auto driver in kerala