நாடாளுமன்றத்தில் அமளி - எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு.! - Seithipunal
Seithipunal


நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன.

இதனால், பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்ஜெட்டில், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

opposition mp walk out of parliment for budget issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->