எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும் - எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி! - Seithipunal
Seithipunal


புதுடெல்லி : எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்காக தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேதியில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை  சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் ராகுல் காந்தி பேசுகையில், எதிர்க்கட்சிகளில் பேச அனுமதிப்பதன் மூலம் இந்தியா மக்களின் பிரதிநிதித்துவப் படுத்த எங்களை அனுமதிப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையை செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும். உங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties will echo people voice Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->