தொங்கு பாலம் விபத்து: குஜராத்தின் நியாயமான பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது - ப.சிதம்பரம் - Seithipunal
Seithipunal


குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்நிலையில் சாத் பூஜை மற்றும் வார விடுமுறையையொட்டி கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது. 

இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மோர்பி பாலம் விபத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், தொங்கு பாலம் விபத்து குஜராத்தின் நியாயமான பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துயரச் சம்பவத்திற்கு அரசு சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு என்றும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று யாரும் ராஜினாமா செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

P Chidambaram says bridge accident has brought shame to Gujarat fair name


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->