அட்சய திருதியை முன்னிட்டு 'போன் பே' வெளியிட்ட அட்டகாசமான ஆஃபர்.! - Seithipunal
Seithipunal


செல்போன்களின் மூலமாக நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிப்பது போன் பே. பெரும்பாலான நபர்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை போன் பே செயலின் மூலமாகவே  கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு 'போன் பே' நிறுவனம் மேலும் பல வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலும் புதிய சலுகைகளை அறிவித்திருக்கிறது.

அந்த அறிவிப்பின்படி போன் பே செயலியை பயன்படுத்தி அட்சய திருதியை என்று தங்கம் வாங்குபவர்களுக்கு கேஷ் பேக் ஆஃபர்களை அறிவித்திருக்கிறது. அதன்படி 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கேஷ் பேக் பெறலாம்.

ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் இந்த ஆஃபர் அவர்களுக்கும் பயன்படும் என போன் பே நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் வாங்கப்படும் தங்கத்தை இலவசமாக லாக்கரில் சேமித்து வைக்கும் வசதியையும் போன் பே வழங்கும் என  அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு வெளியான இந்த அறிவிப்பால் போன் பே பயனளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Phone pe has announced an amazing offer on the occasion of Akshaya Trithi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->