தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு..பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உயிரிழப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

83-வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஷாங்பங்களா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

இவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விஸ்வா தீனதயாளனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,

டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவர் மற்ற வீரர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். பல போட்டிகளில் தன் தனித்திறமையை நிரூபித்தவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இருக்கும். ஓம் சாந்தி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi mourns death of Tamil Nadu table tennis player Vishwa Deenadayalan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->