தமிழ் புத்தாண்டு விழா... பிரதமர் மோடி பங்கேற்பு.. அமைச்சர் எல்.முருகன் வீட்டில் தடபுடலான ஏற்பாடு..!!
PM modi participate tamil new year function in minister L murugan home
தமிழ் புத்தாண்டு விழா... பிரதமர் மோடி பங்கேற்பு.. அமைச்சர் எல்.முருகன் வீட்டில் தடபுடலான ஏற்பாடு..!!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டு வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள காமராஜ் லேன் பகுதியில் உள்ள இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழாவை நடத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏற்பாடு செய்துள்ளார்.

நாளை மாலை 6.30 மணி அளவில் நடைபெறும் புத்தாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதே போன்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்தை தெரிவித்துவரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்வாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
PM modi participate tamil new year function in minister L murugan home