நடிகை சமந்தாவின் ரகசிய நிச்சயதார்த்தம்? உண்மை என்ன?
Actress Samantha secret engagement What is the truth
நடிகை சமந்தா மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்! சமீபத்தில் இணையத்தில் வைரலாகிய ஒரு புகைப்படத்தால், அவர் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
எப்படி இந்த வதந்தி கிளம்பியது?
-
சமந்தாவின் கை விரலில் வைர மோதிரம் இருப்பது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இது நிச்சயதார்த்த மோதிரமா? என்ற கேள்விகள் எழுந்தன.
-
இந்த மோதிரத்தை வைத்து, இவர் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
சமீபத்தில் ஒரு பார்ட்டியில் இருவரும் ஒன்றாக பங்கேற்ற புகைப்படங்கள் வெளிவந்ததும், இந்த வதந்திகள் மேலும் வலுப்பெற்றன.
சமந்தா - ராஜ் நிடிமோரு டேட்டிங் செய்துக்கொண்டிருக்கிறாரா?
-
"தி ஃபேமிலி மேன் 2" & "சிட்டாடல்: ஹனி பன்னி" தொடர்களில் பணியாற்றிய இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் சமந்தா நெருக்கமாக இருப்பதாகப் பேச்சு.
-
சமீபத்தில் பிக்கல் பால் போட்டியில் இருவரும் கைகோர்த்து இருந்தது கூட டேட்டிங் கோணத்தில் பேசப்பட்டது.
-
ஒரே மாதத்தில் இரண்டுமுறை ஒரே இடத்தில் காணப்பட்டதால், ரசிகர்கள் உறுதியாக இருவரும் காதலிக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.
சமந்தாவின் இரண்டாவது திருமணம்?
-
நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகு, அவரும் நடிகை ஷோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.
-
இதைத் தொடர்ந்து, சமந்தா மறுமணம் செய்ய உள்ளாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை!
இந்த வதந்திகள் உண்மைதான் என்றால், சமந்தா அல்லது ராஜ் நிடிமோரு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை இருவரும் இதற்கான பதிலை வழங்கவில்லை.
English Summary
Actress Samantha secret engagement What is the truth