#Breaking: பாண்டிச்சேரி சட்டப்பேரவை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் செல்வம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக ரங்கசாமி பதவி வகிக்கிறார். புதிய ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டப்பேரவை தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகராக ஏம்பலம் செல்வம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் அலுவல் குழுவுடன் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் இதனை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்குகிறது. 

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உரையாற்றுகிறார். அவரது உரை முடிந்த பின்னர், ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதுச்சேரி மாநில முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 

இந்த பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், பட்ஜெட் மீதான விவாதங்கள் சுமார் 15 நாட்கள் நடைபெறுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் கொரோனா பாதுகாப்பு விதிமுறையுடன் நடைபெறும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pondicherry Assembly Conducting on 26 August 2021


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->