கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்.! தீவிரப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!
Precautionary measures for intensifying African swine fever in Kerala
கேரள பாலக்காடு முதலாமடா பகுதியில் அமைந்துள்ள தனியார் பன்றிப் பண்ணையில் தொடர்ச்சியாக பன்றிகள் உயிரிழந்தன. இதையடுத்து அங்குள்ள பன்றிகளுக்கு பரிசோதனை செய்ததில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, சம்பந்தப்பட்ட பன்றிப்பண்ணையை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதி தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுமார் 10 கிலோமீட்டர் சுற்றுளவில் உள்ள பண்ணைகளில் பன்றிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய் கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதையத்து முன்னெச்சரிக்கையாக பன்றிப் பண்ணைகளில் பணியாற்றுபவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடல்நிலை பரிசோதனை செய்யப்பட உள்ளது.
English Summary
Precautionary measures for intensifying African swine fever in Kerala