கலவரங்களுக்கு நடுவில் பிரதமர் மோடியின் யோகா பயணம் !! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாள் சுற்று பயணமாக ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணம் காஷ்மீர் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர உள்ளது. இங்கு நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பதுடன், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

வருகின்ற ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினத்தில் SKICC இல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை பாதுகாப்பு நெறிமுறையின் கீழ் அந்த இடத்தை உஷார்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர்களை மேம்படுத்துதல் மற்றும் ஜம்மு காஷ்மீரை மாற்றுதல் என்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் மோடி உரையாற்றுகிறார். விவசாயம் தொடர்பான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனுடன், புதிதாக நியமிக்கப்பட்ட சில ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்குவார். இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீநகரில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, ​​ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகள் பலரும் பிரதமருடன் இணைவார்கள். இங்குள்ள மக்களிடமும் உரையாற்றுவார். அதன்பின், இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட யோகாசனத்திலும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இங்கு ஆளில்லா விமானங்கள் பறக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister narendhra modi is going to visit jk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->