பைத்தியக்காரர்களுக்கு தெரியாது! ராகுல் காந்தியை கன்னத்தில் அறைய வேண்டும் - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியை பாராளுமன்றத்துக்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பரத் செட்டி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்றத்தில் இந்து மதம் கடவுள் சிவனின் படத்தை ராகுல் காந்தி கையில் ஏந்தி பாஜகவினர் முன் காட்டியது குறித்து பேசும் போது பரத் செட்டி தெரிவித்ததாவது, சிவன் நெற்றிக்கண்ணை திறந்தால் சாம்பலாகி விடுவோம் என்று பைத்தியக்காரர்களுக்கு தெரியாது.

இந்துக்கள் குறித்து என்ன சொன்னாலும் அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறார். பாராளுமன்றத்தில்  ராகுல் காந்தியின் கொப்பரைக்கெல்லாம் உள்ளூர் தலைவர்கள் வாலை ஆட்டுகின்றனர்.

இந்து மதத்தையும் இந்து கோயில்களையும் பாதுகாப்பதை பாஜக கடமையாக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் இந்து மதமும் இந்துதுவாவும் வேறு வேறு என்று சொல்லி வருகிறது. ராகுல் காந்தி குஜராத்துக்கு சென்றால் மட்டும் கடவுள் சிவனின் தீவிர பக்தராக மாறிவிடுகிறார்.

நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெறும் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஏதோ மிகப்பெரிய சாதனை செய்ததாக ராகுல் காந்தி கூறி வருகிறார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராளுமன்றத்துக்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi should be slapped on the cheek BJP MLA Bharat Chetty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->