ரூ.100 மட்டும் லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி... 32 ஆண்டுகளுக்கு பிறகு சிறை தண்டனை..!! - Seithipunal
Seithipunal


ரயில்வே ஊழியராக பணியாற்றிய ஒருவருக்கு ஓய்வு பெற்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வாங்கிய ரூ. 100 லஞ்ச பணத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை விதித்து லக்னோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராம் நாராயணன் வர்மா என்ற 82 வயதாகும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கடந்த 1991 ஆம் ஆண்டு ராம்குமார் திவாரி என்பவரிடம் ரூ.100 லஞ்சமாக பெற்றுள்ளார்.

இது தொடர்பான வழக்கில் இரண்டு நாட்கள் சிறையில் இருந்த ராம் நாராயணன் வர்மா அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

தற்பொழுது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது 100 ரூபாய் லஞ்சம் பெற்ற காரணத்திற்காக ராம் நாராயணன் வர்மாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 15,000 அபராதமும் விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராம் நாராயணன் வர்மாவிற்கு தற்பொழுது 82 வயது என்பதால் தண்டனையை குறைக்குமாறு நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வயது மூப்பை காரணம் காட்டி தண்டனை குறைத்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும் என கூறி சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Railway employee jailed after 32 years taking Rs100 bribe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->