ஒரு ஆணாக இருந்தால் வேறு சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும் - அஜித் பவாரை விளாசிய சரத்பவார் கட்சி தலைவர்.! - Seithipunal
Seithipunal


288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து ஏக்நாத் ஷிண்டே அந்த கட்கியை தனக்காக்கி கொண்டார். 

இதேபோல் அஜித் பவார் சரத்பவாரின் தேசியவாத கட்சியை பிரித்தது மட்டுமல்லாமல் அந்த கட்சியை தனக்காக்கி கொண்டார். இதனால் இரண்டு கட்சிகளிலும் கட்சியை பிரித்துச் சென்றவர்கள் மீது கடுமையான விமர்சனம் வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 

இதற்கு பிரிந்து சென்றவர்களும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை-கல்வா தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து போட்டியிட்டு வருபவர் ஜிநே்திர அவாத். அஜித் பவார் கட்சி ஒரு பிக்பாக்கெட் கும்பல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்ட ஜிதேந்திர அவாத், "தேசியவாத காங்கிரஸ் கட்சி யாரைச் சார்ந்தது? சரத் பவரை சார்ந்தது. ஒருநாள், அஜித் பவார் வந்தார். அவர் சரத்பவாரை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவருடைய கடிகாரம் சின்னத்தை பறித்துக் கொண்டார். இது பிக்பாக்கெட் கும்பல். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், தைரியம் உள்ளவராக இருந்தால், நீங்கள் வேறு சின்னத்தில் நின்று போட்டியிட்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarath bavar party leader speech about ajith bavar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->