பிரதமரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது என தெரிவித்துள்ளார். 

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் புதுடெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இன்று பிரதமரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ''சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் நானும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம். 

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். கிரிட் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரி சக்தி, உணவு பாதுகாப்பு போன்றவற்றில் இரு நாடுகளும் மகத்தான ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக பல்வேறு முயற்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன'' என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சவுதி இளவரசருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் அரசு முறை பயணமாக இந்தியா வந்தபோது அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளவரசர் தெரிவித்திருப்பதாவது, ''இந்தியாவில் இருப்பது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள். உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் உலகிற்கு நன்மை பயக்கும். 

இரு நாடுகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை கொண்டு வர நாங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்கிறோம்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi Arabia Crown Prince meet Prime Minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->