லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு ஆப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
SC verdict MP MLAs take bribes are not immune from investigation
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வாக்களிக்க லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பேச்சு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விலக்கு அளித்திருப்பதற்கு எதிராக நரசிம்ம ராவ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 1998ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்நிலையில் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் எம்எல்ஏ சீதா சோரனின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு "நாடாளுமன்றம் சட்டமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைக்கும். விலக்கு அளித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு முரணாக உள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் லஞ்சம் வாங்கும் அளிக்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
English Summary
SC verdict MP MLAs take bribes are not immune from investigation