மஹாராஷ்டிராவில் புதிய அமைச்சரை வரவேற்க வெயிலில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் புதிய அமைச்சரை வரவேற்க வெயிலில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ.! 

கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் பலம் வாய்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.

அக்கட்சியின் நிறுவனரான சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவிடம் தஞ்சம் புகுந்துள்ளார். 

இது மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் கூட்டணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அணில் பைதாஸ் பட்டேல் என்பவர் பதவியேற்றார். 

இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான ஜல்கான் மாவட்டத்தில் உள்ள அமால்னர் பகுதிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக பள்ளி மாணவ, மாணவிகளை சாலையோரம் வெயிலில் அமரவைத்துள்ளனர். 

நீண்ட தாமதத்திற்குப் பிறகு வந்த அமைச்சரை தரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் எழுந்து சல்யூட் அடித்து வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school students sit onb road for welcome new minister of maharastra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->