படுத்துக்கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட சிறுவன் - நொடியில் பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பூமில் படுத்தபடி செல்போனில் கேம் விளையாடி கொண்டே, ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது சிறுவன் தொண்டையில் அடைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், "வெளி ஊரில் வேலை செய்துவிட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய சிறுவனின் மாமா ரசகுல்லா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளார். 

அப்போது, ரசகுல்லா சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது. இதனால், சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதைப் பார்த்த அமித் சிங்கின் மாமா ரஸ்குல்லாவை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. அதன்பிறகு, சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். 

உடனே அவரது குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seventeen years old boy died for eat rasakulla in jarkhant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->