அவைகுறிப்பில் இருந்து ராகுல் காந்தியின் உரைகள் நீக்கம்.!
some parts remove ragul gandhi speech in lokshaba
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியதையடுத்து இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார். இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பாஜக எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார்.
இந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். அதுமட்டுமல்லாமல், அக்னிபாத் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டும் மத்திய அரசை அவர் சாடினார்.
இதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி பேசியதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவை குறித்து ராகுல்காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. இந்துக்கள், பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் குறித்த பேச்சில் சில பகுதிகள் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
English Summary
some parts remove ragul gandhi speech in lokshaba