சபரிமலையில் குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.!
special arrangements tp childrens and elder peoples in sabarimalai
மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் சபரிமலையில் முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"சபரிமலை சீசனை முன்னிட்டு இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள்.
சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
special arrangements tp childrens and elder peoples in sabarimalai