சென்னை புழல் சிறையில் நடிகை கஸ்தூரி அடைப்பு?
Actress kasthuri locked up in puzhal jail in chennai
சென்னை எழும்பூரில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்று வந்து தமிழர்கள் என்று கூறும் போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள் என்று பேசினார்.
கஸ்தூரியின் இந்த பேச்சிற்கு திமுக சார்பில் ஆ.ராசா கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில், அவருக்கு சம்மன் வழங்க சென்றபோது அவர் தலைமறைவானது தெரிய வந்தது.
இதற்கிடையே, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து நடிகை கஸ்தூரியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான அவரை ஹைதராபாத்தில் போலீசார் பிடித்த நிலையில், தற்போது அவர் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். நடிகை கஸ்தூரி முன்னதாக காரில் இறங்கிய போது சிரித்த படியே இறங்கினார் குறிப்பிடத்தக்கது.
English Summary
Actress kasthuri locked up in puzhal jail in chennai