வாயில் பிறப்புறுப்புடன் சடலமாக கிடந்த ஆசிரியர் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிபூர்துவார் நகரில் உள்ள ஜெய்கான் பகுதியில் நேற்று முன்தினம் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை செய்ததில் அந்த நபர் அப்பகுதியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த சாந்தாபீர் லாமா என்பவருடையது என்பது தெரியவந்துள்ளது. 

தல்சிங்பாரா பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த சில வருடங்கள் முன்பு ஜெய்கான் பகுதியில் வந்து குடியேறி ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் உள்ள உள்ளூர் தேவாலயத்திலும் இயங்கி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. 

இந்த நிலையில் போலீசார் லாமாவை யார் கொலை செய்தது என்று விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher body found in west bengal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->