முதல் முறை இந்தியா வரும் இலங்கை அதிபர் திசநாயக.. பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டம்!
Sri Lankan President Dissanayake to visit India for the first time Plans to meet PM Modi
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் நாளை இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.அனுர குமார திசநாயகே இலங்கை அதிபராக பதவியேற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் நாளை இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது புத்த கயா செல்ல உள்ளார்.
English Summary
Sri Lankan President Dissanayake to visit India for the first time Plans to meet PM Modi