அல்லு அர்ஜுன் மீது கிரிமினல் வழக்கு என்பது ஏற்புடையதல்ல..ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம்!
Criminal case against Allu Arjun is not acceptable Jagan Mohan Reddy
நடிகர் அல்லு அர்ஜுனின் கைதுக்கு ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இன்று (டிசம்பர் 5) வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
திரைப்படம் வெளியான நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றபோது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.உயிரிழந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஐதராபாத்தில் சந்தியா திரையரங்கில் இரவு பிரீமியர் காட்சியை காண வந்த அல்லு அர்ஜுனைக் பார்க்க கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.
பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யபட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் அல்லு அர்ஜுனை கைது செய்து அவரது வீட்டில் இருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.அவரிடம் தொடர்ந்து 2 மணி நேரமாக விசாரணை நடந்து வந்தது. பிறகு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு, நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் கைதுக்கு ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது. திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் ஆறுதல் தெரிவித்துவிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டார். இருப்பினும் இச்சம்பவத்திற்கு அவரை நேரடியாக பொறுப்பாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம்? கூட்ட நெரிசலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அர்ஜுன் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Criminal case against Allu Arjun is not acceptable Jagan Mohan Reddy