கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
Captain Vijayakanths sons film trailer released
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பம் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், தமிழ் ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயகாந்த் மறைவுச் செய்தியை அறிந்ததும் விஜய் முதல் கமல், ரஜினி வரை அனைத்து நடிகர்களும், சினிமா துறைப் பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.இந்நிலையில் 'படை தலைவன்' படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
https://youtu.be/ZQ0KOnALHSg
English Summary
Captain Vijayakanths sons film trailer released