ஜல்லிக்கட்டை ஒழிக்க நினைக்கும் பீட்டா அமைப்பு! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 102 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் எந்த ஒரு தீங்கும் இன்றி வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ன் படி விலங்குகளுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் கிடையாது. ஆனால் விலங்குகளுக்கு அடிப்படை உரிமை உள்ளதாக பழைய உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பீட்டா போன்ற அமைப்புகள் இது போன்ற மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் தமிழக அரசு தனது வாதத்தினை பதில் மனு மூலமாக முன்வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu govt filed reply petition in Jallikattu related case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->