பிரியாணி ருசியா இல்ல! - ஓட்டல் ஊழியர்களின் வெறிச்செயலால் பறிபோன வாலிபர் உயிர்!
teenager death hotel staff police investigated
தெலுங்கானா, ஹைதராபாத் சந்திராயன் குட்டாவை சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 30) இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு உணவாகத்துக்கு நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றிருந்தார்.
நண்பர்கள் அனைவருக்கும் அலி பிரியாணியை ஆடர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அலி மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணி ருசியாக இல்லை என ஹோட்டல் ஊழியரிடம் தெரிவித்ததால் ஹோட்டல் ஊழியர்களுக்கும் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/crime 45545.png)
வாக்குவாதம் முற்றியதால் ஹோட்டலில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஹோட்டலை மூடிவிட்டு ஒன்று சேர்ந்து அலி மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கியதால் அவர்கள் வலியால் கதறி துடித்துள்ளனர்.
இருப்பினும் ஆத்திரம் தாங்காமல் ஹோட்டல் ஊழியர்கள் சரமாரியாக தாக்கி பின்னர் அவர்களை வெளியே தூக்கி வீசினர்.
படுகாயம் அடைந்த அலியை அவரது நண்பர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஹோட்டல் ஊழியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teenager death hotel staff police investigated