விபத்தில் உயிரிழந்த பெண் எம்.எல்.ஏ.! சோகத்தில் மூழ்கிய தெலுங்கானா!
Telangana mla died
தெலுங்கானா, பி.ஆர்.எஸ். எம்எல்ஏ லஷ்ய நந்திதா (வயது 37) நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காரில் வீடு திரும்பிய போது ஹைதராபாத், சுல்தான்பூர் அருகே கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எம்.எல்.ஏ நந்திதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த லஷ்ய நந்திதா தெலுங்கானா கண்டோண்ட்மென்ட் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எம்.எல்.ஏ மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கண்டோண்ட்மெண்ட் சட்டமன்ற உறுப்பினர் லஷ்ய நந்திதாவின் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நந்திதாவின் தந்தை எனக்கு நெருக்கமாக இருந்தவர். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
அதே மாதத்தில் நந்திதாவும் உயிரிழந்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.