அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கழிவுநீர் வடிகாலில் ஏற்பட்ட திடீர் கேஸ் கசிவால், பயிற்சி மைய மாணவர்கள் 10 பேர் மயங்கி விழுந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மகேஷ் நகரில் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பயிற்சி மையத்தில் நேற்று மாலை திடீரென கழிவுநீர் வடிகாலில் கேஸ் கசிந்துள்ளது. இதனை சுவாசித்த பத்து மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

இதைப்பார்த்த சக மாணவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூச்சு விடுவதில் சிரமம், தாங்க முடியாத தலைவலி உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பயிற்சி மையத்திற்கு அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் கேஸ் கசிவு ஏற்பட்டிருக்கலாம். அதேபோன்று, அந்த கட்டிடத்தின் மாடியில் உள்ள சமையற் கூடத்தில் இருந்தும் புகை வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten students faint in rajasthan for gas leak


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->