அதிமுகவின் முக்கிய புள்ளி மீது SC/ST வன்கொடுமை வழக்கு! கொந்தளிக்கும் முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


அதிமுக ஈரோடு மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு துணைத் தலைவர் பசுபதி செந்தில் மீது SC/ST act கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதற்கு, முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்த கையாலாகாத விடியா திமுக அரசு கரூர் மாவட்டத்தில் மட்டும் தனி அரசாங்கம் நடத்தி வருகிறது. விடியா திமுக ஆட்சியின் அவலங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதை ,பொறுக்க முடியாமல் காவல் துறையை ஏவல் துறையாக கொண்டு, ஈரோடு மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு துணைத் தலைவர் பசுபதி செந்தில் அவர்களை ஏற்கனவே பொய் வழக்கில் கைது  செய்யப்பட்டு அவர் சிறையில் உள்ளார். 

இந்த நிலையில் மேலும் ஒரு பொய் வழக்காக, கரூர் மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ரீகன் என்பவரை திட்டி , அடித்தாக (SC/ST act ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஆட்சி அதிகாரத்தை வைத்து எந்த எல்லைக்கும் செல்லும் இந்த திமுக அரசின் அராஜக போக்கையும் அதற்கு துணை போகும் கரூர் மாவட்ட காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கிறேன். 

ஆட்சியும் அதிகாரமும் உள்ள மமதையில் ஆடும் இந்த விடியா திமுக அரசுக்கும், கரூர் மாவட்ட காவல் துறைக்கும் ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இந்த வழக்கில் இருந்து மீட்பதற்கான அனைத்து சட்ட பூர்வ நடவடிக்கைகளையும் மாவட்டக் கழகம் மேற்கொண்டு வருகிறது" என்று எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MR Vijayabaskar condemn to DMK Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->