ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் என்கவுண்டர்.! தீவிரவாதி சுட்டுக்கொலை - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்யடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசார்பன் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஜம்மு-காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை, பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை கடத்தி மூன்று பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist killed in encounter Jammu and Kashmir Rajouri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->