ஆதார் அட்டையை வழக்கம்போல் பயன்படுத்தலாம்! ஆதார் சுற்றறிக்கையை திரும்பப்பெற்றது மத்திய அரசு.!
The Aadhar instruction was withdrawn by the Central Government
ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தலாம் என்பதால், ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
ஓட்டல்கள், திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டு நகலை சேகரித்து அதனை வைத்திருக்கும் அனுமதி இல்லை.
பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது மையங்களில் ஆதார் டவுன்லோட் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். டவுன்லோட் செய்தால் நகல் எடுத்ததும், கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்ததை நிரந்தரமாக டெலிட் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
ஆதார் கார்ட் நகலை சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் மாஸ்க் ஆதார் அட்டை பயன்படுத்தலாம் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், முன்வைக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது.
மேலும் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Aadhar instruction was withdrawn by the Central Government