ரஞ்சி போட்டி 2025; டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் உள்பட அனைவரும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அடுத்த கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்களான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும், சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காகவும் களமிறங்க உள்ளனர்.

அத்துடன், விராட் கோலி டெல்லி அணியின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஆனால் அவர் விளையாடுவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ரோகித் சர்மா மும்பை அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் விளையாடுவது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ள சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

அத்துடன், மொத்த அணியின் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக நாளை (17-01-2025) வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் படும் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியதுடன் 10 வருடங்கள் கழித்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் கோட்டை விட்டது.

இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த தோல்விகளுக்கு இந்திய அணி பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது எல்லோரும் பல விமரசங்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, அணியின் மூத்த வீரர்கள் உள்பட அனைவரும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rishabh Pant to be the captain of the Delhi Ranji team


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->