பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தலையை துண்டித்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணின் தலையை துண்டித்து உடல் நிர்வாணமாக கீழே கிடந்து உள்ளது. இ ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர்.

அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து  தலையைவெட்டி கொலை செய்துவிட்டு நிர்வாண நிலையில் அப்பெண்ணின் உடலை சாலை ஓரம் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேக படுகின்றனர். மேலும், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேகொண்டனர்.

இநிலையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் உள்ள மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடல் கிடந்த இடத்திற்கு அருகே ஒரு பெண் நடந்து செல்வது வீடியோவில் பதிவாகி உள்ளது. அந்த பெண் சாம்பல் நிற கால்சட்டை அணிந்துள்ளார்.

அந்த வகையில்,கொலை செய்யப்பட்ட அந்த பெண் உடல் அருகே சாம்பல் நிற ஆடையின் துண்டுகள் கிடந்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், கண்காணிப்பு கேமராக்கள் உடலை கண்டுபிடித்து எடுத்த இடத்தில் இல்லை. ஆனால் கேமராவில் பெண் ஒருவர் சுமார் 3 கி.மீ தொலைவில் தனியாக நடந்து செல்வது பதிவாகி உள்ளது.

மேலும் விசாரணையில், தனியாக நடந்து சென்ற அந்த பெண் அணிந்திருந்த ஆடைகள், சாலையில் பெண் உடல் அருகே எடுக்கப்பட்ட துணி மற்றும் காலணளுடன் ஒத்துபோவதா கூறினர். போலீசார் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த அந்த பெண் யார் என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை நிகழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி எம்.பி அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்தை குறித்து உடனடியாக, முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The cruelty of sexually assaulting a woman and cutting off her head


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->