தேர்தல் சிறப்பம்சங்கள், தற்போது வரை நடந்தது என்ன ? - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலின் வாக்குகள் 543 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன, அதில் தற்போது வரை நடந்த சுவாரசியமான செய்திகளை காணலாம். மத்தியில் ஆளும் கட்சியான பஜக 290 மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம் 130 தொகுதிகளில் தனித்து முன்னிலை வகிக்கிறது. மேலும், மஹாராஷ்டிராவில் பஜகவை பின்னுக்கு தள்ளிய இந்தியா கூட்டணி, பஜக 16 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 30 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேலும் பஞ்சாபில் பஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை.

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பஜக வேட்பாளர் அமித் ஷா 1.50 லச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

220கும் அதிகமான தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்று பஜகவுக்கு கடும் சவால் அளிக்கிறது. பஜகவின் கோட்டையான 80 தொகுதிகளை உள்ளடக்கிய உத்தர பிரதேஷத்தில் இந்தியா கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மேலும் பஜக 37 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதை தொடர்ந்து உத்தர பிரதேஷ் வாரணாசி தொகுதியில் 1 லச்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the highlights of the election 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->