பாஜக எம்.பி.யை சந்தித்த மம்தா - பதற்றத்தில் பாஜக! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. எம்.பி.யை சந்தித்த மம்தா சந்தித்துள்ளது, மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பான்ர்ஜி, கூச் பெஹார் பகுதியில் உள்ள மதன் மோகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது, கிரேட்டர் கூச் பெஹார் மக்கள் இயக்க தலைவர் மற்றும் பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜை மம்தா பானர்ஜி சந்தித்தார். 

இந்த சந்திப்புக்கு முன் அங்கு இருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்ற மம்தா,  பா.ஜ.க. எம்.பி அனந்த மகாராஜ் உடன் வெகுநேரம் பேசியதாக சொல்லப்படுகிறது. 

இந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி, 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்த நிலையில், மத்தியில் தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMC Mamata Banerjee BJP MPs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->