பி.எஸ்.என்.எல் லோகோ மாற்றம் - செல்வப்பெருந்தகை கண்டனம்.!
tn congrass leader selvaperunthagai condems loga change
மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் லோகோ இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லோகோவில் காவி நிறம், இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது.
இந்த புதிய லோகோவில் காவி நிறம் இடம்பெற்றதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "அனைவரும் விரும்பும் காவியமான இத்தேசத்தின் உள்ள அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்?"
வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் உள்ளிட்டவற்றின் லோகோவைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. முன்பு இருந்த லோகோவில் இந்தியாவை இணைப்போம் என்றிருந்தது. தற்போது பாரதத்தை இணைப்போம் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் பா.ஜ.க.வின் கொடியின் நிறத்தை ஒத்துள்ளது."
"புதியதாக கட்டிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் எங்கும் காவி நிறம். அதே போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியிலிருக்கும் ஊழியர்களின் சீருடைகளும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது."
"இப்படி பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி, அரசு நிறுவனங்களை காவி மயமாக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tn congrass leader selvaperunthagai condems loga change