உ.பியில் பிரமாண்டமாக நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா.!
today kaasi tamil sangamam closing ceremony
கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என்று சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிறைவு விழாவிற்கு உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கின்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காசி தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட 12 விரைவு ரெயில்களில், இதற்காக ஒதுக்கப்பட்ட, 36 பெட்டிகளில் மொத்தம், 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
today kaasi tamil sangamam closing ceremony