உ. பி.யில் சோகம்: பராமரிப்பு ஊழியர்கள் ரெயில் மோதி உயிரிழப்பு!
train accident 2 railway employees killed
உத்திர பிரதேசம், பாரபங்கி மாவட்டத்தின் ஜகாங்கிராபாத் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்தது. இதனை சரி செய்வதற்காக 3 ஊழியர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கிருந்த 2 தண்டவாளத்திலும் எதிரெதிரே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து கொண்டிருந்தது. இதனால் ஊழியர்கள் தப்பிக்க வழி இல்லாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 ஊழியர்கள் மீதும் ரயில் மோதியது.
இதில் ஊழியர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மற்ற 2 ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு ஊழியரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
train accident 2 railway employees killed