மம்தாவுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ்! இந்தியாவில் 38% பெண் எம்.பிகளை கொண்ட கட்சி நாங்கதான் - மம்தா பானர்ஜி! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 38% பெண் எம்.பிகளை கொண்ட ஒரே கட்சி திரிணாமூல் காங்கிரஸ்தான் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

இந்தப் பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பேரணியின் முடிவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொதுமக்கள் இடையே உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சதவீதப் பெண் எம்.பிகளைக் கொண்ட ஒரே கட்சி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மட்டுமே.

தேர்தலுக்குப் பின் அரசியல் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறி வருகின்றனர். ஆனால் அதை செய்ய முடியவில்லை. 38 சதவீதம் பெண்களை பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த ஒரே கட்சி நாங்கள் தான் என்று பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamool Congress is the only party in India with 38 women MPs Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->