காருக்கு வழிவிடாததால் ஆத்திரத்தில் முதியவரை அடித்துக் கொன்ற இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


காருக்கு வழிவிடாததால் ஆத்திரத்தில் முதியவரை அடித்துக் கொன்ற இளைஞர்கள் கைது.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ராஜேந்திர நகரில் பங்கஜ் தாக்குர் என்ற டெலிவரிமேன் நேற்று தனது இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு வாலிபர்கள் பங்கஜிடம் இருசக்கர வாகனத்தை எடுக்குமாறுத் தெரிவித்துள்ளனர். 

ஆனால் பங்கஜ் தாக்குர் வாகனத்தை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி பங்கஜ் தாக்குரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பங்கஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பங்கஜை தாக்கிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths arrested for kill old man in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->