பயங்கர தீ விபத்து: 7 மாத குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி பலி! உத்தரபிரதேசத்தில் சோகம்! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம், காசியாபாத் மாவட்டத்திலுள்ள பெஹ்தா கிராமத்தில் ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

தரை தளத்தில் பற்றி எரிந்த தீ வேகமாக மேல்மாடிக்கும் பரவியதால் வீட்டில் உள்ள இருந்தவர்கள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP house catches fire children including 5die


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->