உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! தெருநாய்களால் உயிர்பிழைத்த அதிசியம்! ஒரு அதிர்ச்சி குற்றப் பின்னணி! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில், நிலத்தகராறு பிரச்சனையில் உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தெருநாய்களால் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ரூப் கிஷோர். 24 வயதாகும் இந்த இளைஞர் கடந்த மாதம் 18ஆம் தேதி ஆர்டோனி பகுதியில் சென்ற போது, நான்கு பேர் சேர்ந்த கும்பல் தாக்கியுள்ளது. 

இதில் மயக்கம் அடைந்த அவரை இறந்துவிட்டதாக எண்ணிய அந்த கும்பல், ஒரு பண்ணையில் வைத்து கிஷோரை உயிருடன் புதைத்துள்ளனர். 

இந்த நிலையில், அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், கிஷோர் புதைக்கப்பட்டிருந்த இடத்தை தொடர்ச்சியாக தோன்றியுள்ளது. இதில் கிஷோரின் உடல் வெளியே தெரிய வரவே, அவர் சுயநினைவு பெற்று அங்கிருந்து எழுந்து உள்ளார். 

தொடர்ந்து உள்ளூர் மக்களின் உதவியோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கிஷோர் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த அதிர்ச்சி பின்னணி வெளியாகி உள்ளது.

இது குறித்து கிஷோரின் தாய் அளித்துள்ள புகாரில், நான்கு பேர் கொண்ட கும்பல் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து அழைத்துச் சென்று உயிரோடு புதைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய நான்கு பேர் (அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ்) கொண்ட அந்த கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை நில தகராறு காரணமாகவே கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar pradesh Agra Man Buried Alive Street Dogs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->