திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை வி.ஐ.பி தரிசனம் தொடர்ந்து ரத்து.! தேவஸ்தானம்.!
VIP darshan canceled in Tirupati
திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை விஐபி தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள திருப்பதி ஒரு வைணவ தலமாகும். திருப்பதி இந்தியாவிலுள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் பெறுவார்கள்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் பெற வந்ததால், நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்பு தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை விஐபி தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
English Summary
VIP darshan canceled in Tirupati