தொடரும் சோகம்! கொடூர நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 270! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் யாரும் வெளிய வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தின் மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில்அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி திரட்டும் வகையில் கேரளா முதலமைச்சர் நிவாரணநிதி திறப்பட்டுப்பட்டு வருகிறது. கேரள அரசுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5கோடி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுக சார்பில் ரூ.1 வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலச்சரிவில் தற்போதுவரை நிலசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  270 ஆக உயர்ந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wayanad landslide death toll rises to 270


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->